கண்டி வன்முறை, இராணுவ சிப்பாய் உள்ளிட்ட 4 பேர் கைது
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். குறித்த அனைவரும் பயங்கரவாத விசாரணை பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவமானது முழு நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. அத்துடன், சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment