சு.க. 3 ஆக பிளந்தது
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் ஒன்று அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 25 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் வருகை தந்திருந்ததாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். அதன்படி இந்தக் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறினார்.
இதேவேளை மஹிந்த சமரசிங்க, பியசேன கமகே, துமிந்த திஸாநாயக்க, மானுஷ நாணயக்கார, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஃபைசர் முஸ்தபா மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க குழுவில் உள்ளனர். இதேவேளை சுதந்திர கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்கு தயாராக இருப்பதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
எனினும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
மறுபுறம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ஆதரவோ எதிரோ இல்லாது மௌனித்திருப்பார் எனக் கூறப்படுகிறது….
Post a Comment