தேங்காய் விலை 100 - தேங்காய் எண்ணெய்யின் விலை 330 ரூபா
பண்டிகைக்காலமான தற்போது சந்தைகளில் தேங்காயின் விலை 100 ரூபாவாகவும், தேங்காய் எண்ணெய்யின் விலை 330 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதன் காரணமாக புதுவருடத்தை கொண்டாட தயாராகும் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் இந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
சில வர்த்தகர்கள் எழுந்தமான முறையில் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதாகவும் அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
Post a Comment