பாராளுமன்றத்தில் SLMC + TNA சூடான வாக்கு வாதம்
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆஸ்பத்திரி அபிவிருத்தி மற்றும் சுகாதார சேவை தொடர்பில் ஆளும் தரப்பிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிகளுக்குமிடையில் நேற்று (22) சபையில் காரசாரமாக வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரிகளை தரமுயர்த்துவதிலும் முன்னேற்றுவதிலும் தமிழ் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிகள் குற்றஞ்சாட்டியதோடு அதனை பிரதி சுகாதார அமைச்சரும் மு.கா எம்.பிகளும் நிராகரித்திருந்தனர்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டத்தின் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நேற்று நடை பெற்றது.
இதில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி கவிந்திரன் கோடீஸ்வரன், முஸ்லிம் பகுதிகளிலுள்ள ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டாலும் தமிழ் பகுதிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய எம்.ஐ.எம். மன்சூர் எம்.பி அதனை நிராகரித்ததோடு மாகாண ஆஸ்பத்திரிகளுக்கு இன விகிதாசாரப்படி நிதி ஒதுக்குவதாக குறிப்பிட்டார்.இது தொடர்பில் இருவருக்கும் இடையில் சூடானவாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
இதேவேளை மட்டு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி ஸ்ரீநேசன் உரையாற்றுகையில், தமிழ் ஆஸ்பத்திரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்பத்திரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்கையில் இடமொதுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். இதற்கு பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் பதிலளித்ததோடு அந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், மு.காவும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து ஆட்சி நடத்திய மாகாண சபையிலே இவை தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டதாகவும் வேலைவாய்ப்பு வழங்குவதில் தனக்கு அன்றி சுகாதார அமைச்சருக்கே அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் இருவருக்கும் இடையில் வாதம் இடம்பெற்றதோடு சுகாதார அமைச்சரின் தலையீட்டை அடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது.
கோடீஸ்வரன் எம்.பி உரையாற்றுகையில், கிழக்கில் திருக்கோவில், வாழைச்சேனை ஆஸ்பத்திரிகள் முன்னேற்றப்படாத போதும் நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில் ஆஸ்பத்திரிகளை முன்னேற்ற அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனாலே அம்பாறை, கண்டி போன்ற பகுதிகளில் இனவாத, மதவாத பிரச்சினைகள் தலைதூக்கியதாக கூறினார். நியாயமாக நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய, எம்.ஐ.எம்.மன்சூர் எம்.பி, யாரோ எழுதிக் கொடுத்ததை அவர் வாசிக்கிறார். நான் கிழக்கு சுகாதார அமைச்சராக இருந்த போது ஒவ்வொரு மாவட்டதிற்கும் இன ரீதியாக நிதி ஒதுக்கப்பட்டது. உங்கள் குற்றச்சாட்டு தவறு என்றார்.
இதற்கு பதிலளித்த கோடீஸ்வரன் எம்.பி , நீங்கள் மாகாண அமைச்சராக இருந்த போது தமிழ் ஆஸ்பத்திரிகள் புறக்கணிக்கப்பட்டன. ஆளணி சேர்ப்பிலும் புறக்கணிப்பு நடந்தது. பக்கசார்பாக நடப்பதை ஏற்க முடியாது என்றார்.
மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய மன்சூர் எம்.பி, விகிதாசாரப் படி நிதி ஒதுக்கப்படுகிறது.ஒருபோதும் பாகுபாடாக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றார்.
இதேவேளை நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் கோடீஸ்வரன் எம்.பியின் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் , அவர் முன்வைத்த விடயங்களை அமைச்சரவையில் பிரஸ்தாபிப்பதாகவும் கடினமான காலத்தில் த.தே.கூ அரசிற்கு உதவியதாகவும் குறிப்பிட்டார்.
நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீநேசன் எம்.பி மட்டக்களப்பில் ஒசுசல ஒன்றை அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார். ஆளணி சேர்ப்பின் போதும் புறக்கணிப்பு இடம்பெற்றதாக தெரிவித்த அவர், தொழில் வாய்ப்பு வழங்க பிரதி அமைச்சர் உடன்பட்டாலும் எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். அபிவிருத்தி செய்ய 4 ஆஸ்பத்திரிகள் தெரிவு செய்யப்பட்ட போது தமிழ் பகுதி ஆஸ்பத்திரிகள் புறக்கணிக்கப்பட்டதாக கூறினார்.
பிரதி சுகாதார அமைச்சருடன் எந்த பிரச்சினையும் கிடையாது எனவும் தவறுகளை சுட்டிக் காட்டியதாகவும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர். இனவாதம் பேசுவதாகவும் தொழில் வழங்க பிரதி அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது எனவும் கூறினார். 4 ஆஸ்பத்திரிகள் அபிவிருத்தி செய்ய வெளிநாட்டு உதவி கிடைத்துள்ளதாகவும் ஆஸ்பத்திரிகளை தாம் தெரிவு செய்வில்லை எனவும் கூறினார்.
இதன் போது இருவருக்கும் இடையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது.
இந்த பிரச்சனையை “நீதி நியாயமாக” தீர்ப்பதற்கு சரியான
ReplyDeleteஆள் அந்த “மட்டக்களப்பு பிக்கு” தான்.
அந்த பிக்குவிற்கு “கள்ள வேலைகள்” ஒன்றும் பிடிக்காது.
Antony நீதி நியாயத்தோடு அந்த பிக்குவோடு தீர்த்துகொள்ளாமல் ஏன் முஸ்லிம்களிடம் கேட்டு கெஞ்சுகிறீர்கள். தமிழ் பிரிவினைவாத கிழவர்களை பாராளுன்றம் அனுப்பி என்றுமே கிடைக்க முடியாத ஈழம் சமஸ்டி வட கிழக்கினைபென்று காலத்தை கடத்தும் கயவர்களை பாராளுமன்றம் அனுப்பியது யார் தவறு? உங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அபிவிருத்தி வேண்டாம் பிச்சைஎடுத்தே பிழைத்துக்கொள்கின்றோம் எனும் கொள்கையுடைய உங்களுக்கு எதற்கு அபிவிருத்தி? உன்னை போன்ற கிருஸ்துவ மத மாற்றும் கும்பலுக்கு என்றும் ஒரு பிரச்சினை தேவைபட்டுக்கொண்டே இருக்கின்றது
ReplyDeleteGtx,
ReplyDeleteநாங்கள் எதிர்பார்ப்பது நிரந்தர அபிவிருத்தியை. அதுதான் சமஷ்டி பற்றியும் உரிமை பற்றியும் பேசுகின்றோம். உங்களுடைய அபிவிருத்தியை பார்த்தோம் நாங்கள் கண்டியிலும் அம்பாறையிலும் பூனை குட்டி காவிய கதை போல .
இவர்களுக்கு இதே பொழப்பு. ஆளும் கட்சி வேணாம்.ஆனால் குறித்த அமைச்சரை உருவாக்கிய மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து சேவை செய்தால் மனக்கசப்பு. அவ்வமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு சேவை செய்யாமலும் இல்லை.நான்றிய திருக்கோவில் வைத்தியசாலை பைஸால் காசிம் காலத்தில் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது. அதேபோல் வடக்கில் அமைச்சர் ரிசாட் தமிழ் மக்களுக்கு மீள்குடியேற்ற காலத்தில் எவ்வளவு பெரிய உதவிகளையெல்லாம் செய்தார். ஆனாலும் வீண் வசை மூலம் மக்களிடையே குரோதம் வளர்க்கப்படுகிறது.
ReplyDeleteஓம் தமிழனை போல் அடிவாங்கி முகவரியில்லாமல் போக சோனி என்ன மடையனா?, சிங்களவனோடு மோதி சோனி அழியணுமெண்ட உங்கட கனவு பலிக்காது புலி பயங்கரவாதிகளா
ReplyDelete@Gtx, தற்போது கள்ள வேலைகள் இலங்கையில் கிழக்கில் மட்டும் தான் செய்ய முடியும். (அதுவும், அம்பாரையில் தற்போது ஓரளவு திருத்தி விட்டார்கள் என்று கேள்வி)
ReplyDelete@Gtx,
ReplyDeleteஉங்களுடைய ஒட்டுண்ணி வேலைகள் வெகுகாலம் நீடிக்க வாய்ப்பில்லை. காலம் பதில் சொல்லும். உதாரணமாக
1. வடக்கில் 60 000 பொருத்து வீடுகள் கட்ட முடிவெடுத்த போது அதட்கு வடக்கை பிரதிநித்துவப்படுத்தும் எந்த முஸ்லீம் அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக வட முஸ்லிம்களை விண்ணப்பிக்க சொன்னார்கள். பிறகு எங்களின் எதிர்ப்பால் கல்வீடுகள் இப்பொழுது அங்கே கட்டுப்பட தொடங்க எந்த முகத்தை வைத்து கொண்டு மீண்டும் அதட்கும் விண்ணப்பிக்கின்றார்கள்.
2. இப்பொழுது எந்த ஒரு முஸ்லிம்களோ அல்லது முஸ்லீம் தலைவர்களோ சமஷ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் அது கிடைத்தவுடன் காணி அதிகாரத்துக்கும் போலீஸ் அதிகாரத்துக்கும் முண்டி அடிப்பார்கள்.
இதை தான் சொல்வது பிச்சை அரசியல் என்று இணக்க அரசியல் அல்ல. ஆனால் என்ன நீண்ட காலத்துக்கு இந்த ஊம்புற வேலைகள் எடுபடமாட்டாது. அதுதான் ஞானசார தெளிவாக குறிப்பிட்டார்களே இனி ஒரு பிரச்சினை முஸ்லிம்களால் வந்தால் இஸ்லாமியர்களுக்கு தேவையான விட்டமின்களை வழங்குவேன் என்று.