மத்திய வங்கி அதிகாரிகள் ஓய்வின்பின் IMFஇல் பணியாற்றும் நோக்குடன் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கின்றனர்
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதனை கட்டுப்படுத்தாவிடின் எரிபொருள் விலை அதிகரித்தது போன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு மத்திய வங்கியே பொறுப்பு கூற வேண்டும்.
ஆகவே முடியுமானால் ரூபாவின் பெறுமதியை வலுவாக்கிக் காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கிக்கு சவால் விடுத்தார்.
அத்துடன் நீதிமன்ற கட்டமைப்பினை நவீனமயப்படுத்த வேண் டும். எனினும் அதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கை க்கு அழைத்து வர வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப் பிட்டார்.
மேலும் ,
மத்திய வங்கியில் பணியாற்றும் அதிகாரிகள் ஓய்வுபெற்றதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்து பணியாற்றும் நோக்குடன் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றனர்.
இதனால் தற்போது பொருளாதாரம் பெரும் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டை யார் ஆட்சி செய்தாலும் அதிகாரிகள் ஒருபோதும் மாறுவதில்லை என்றார்.
அதிகாரிகள் படித்து பட்டம் பெற்று வருபவர்கள் அதனால் அரசாங்கம், மாறினாலும் அவர்கள் மாற மாட்டார்கள் அனால் அரசியல்வாசதிகள் அடியாக்களை வைத்து ஐந்து வரிடம் ஓட்டுவார்கள் அதனால் அடுத்த ஆறாஆஆஆஆஆஊ வந்தவுடன் வெளிநாடு பாய வேண்டும் அல்லது வந்த அரசாங்கத்துக்கு கூசா த்துக்க வேண்டும்
ReplyDeleteஆழ்ந்த ஏமாற்றத்தின் பின்னால் சில உண்மைகள் இருக்கின்றன.
ReplyDelete