இலங்கை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக Figco அனுசரணையில் சவூதி செயற்பாட்டாளர்
இலங்கையிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பிரசித்தி பெற்ற உல்லாச பயண ஏற்பாட்டு நிறுவனமான FIGCO LANKA HOLIDAYS (Pvt) Ltd நிறுவனம் 2018 மார்ச் 22 ஆம் திகதி காலை 11 மணியளவில் தனது வெற்றிப்பாதையின் அடுத்த கட்டமாக புதிய காரியாலயத்தை நீர்கொழும்பு சிலாபம் வீதி, கட்டுவ பிரதேசத்தில் வைபவ ரீதியாக திறந்து வைத்தது.
இவ்வைபவத்தில் சவூதி அரேபியாவிலிருந்து வருகை தந்திருந்த பிரபல சமூக வலைதள அரேபிய ஆய்வாளர் (Blogger) முகம்மத் அல்காம்தி அவர்களுடன் கொழும்பில் அமைந்துள்ள சவூதி அரேபிய தூதரக ஊடகப்பிரிவின் பொறுப்பாளர் அலி அல் ஒமரி அவர்களும் மற்றும் சுவூதி விமான சேவையின் இலங்கை-மாலைதீவு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் இமாத் அல் சுப்ஹி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை தருவிக்கின்ற, குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்துவரும் Inbound Tour Operator நிறுவனமாகும்.
நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான முகம்மது கலீல் அவர்களால் இந்நிறுவனம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவருடன் இணைந்து முகம்மது மும்தாஸ், முகம்மது இன்திகாப், துஷாந் ராஜேந்திரன் ஆகியோர் இணை இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.
இவ்வைபவத்தோடு இணைந்த விஷேட அம்சமாக சமீபத்தில் கண்டி பிரதேசங்களில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களால் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை அடையாளம் காண்பதுடன், மத்திய கிழக்கில் இருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் வீழ்ச்சியை மேம்படுத்தும் விதமான கள விஜயமும், சவூதி அரேபியாவுக்கான நேரடி ஒளிபரப்பு சேவையையும் வருகை தந்திருந்த சமூக வலைதள ஆய்வாளரும் ஊடக செயற்பாட்டாளருமான முஷ;ரிப் அல் காம்தி கண்டியிலிருந்து மேற்கொண்டார்
இதற்கான பயண ஏற்பாட்டை ஏற்படுத்திக் கொடுத்ததன்மூலம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேம்படுத்துவதுடன், கண்டியின் பாதுகாப்பான நிலவரங்களை உடனடி ஆவணப்படுத்தலில் ஈடுபடுத்தவும் பங்களிப்பாற்றியது Figco நிறுவனம்.
இலங்கை சுற்றுலா துறையின் மூலமாக பல முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நிறுவனங்கள், சுற்றுலா விடுதிகள், சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் வாகன உரிமையளர்கள், சாரதிகள், சுற்றுலா உணவகங்கள், ஏனைய சுற்றுலா சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களும் பயன்பெரும்நோக்கிலேயே இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளது..
இந்நிறுவனத்தின் முயற்சிகள் வெற்றியடைய உங்கள் பிரார்;;த்தனைகளை அதன் நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.
ANAS ABBAS
Post a Comment