முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினால், நாட்டுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு
கண்டி பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை காரணமாக நாட்டுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இலங்கை சம்பந்தமாக தவறான புரிதலை ஏற்படுத்த கண்டி சம்பவங்கள் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வத்தளையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் அண்மையில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு அடுத்ததாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பயணம் செய்யும் நகரமாக கண்டி விளங்கி வருகிறது.
கண்டியில் அண்மையில் நடந்த வன்முறை சம்பவங்கள் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகியதும் இலங்கை சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
Post a Comment