Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, மஹிந்த அணி உறுப்பினர் கைது


தெல்தெனிய மற்றும் திகன பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனங்களுக்கிடையில் வெறுப்பு மற்றும் வன்முறைகளை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் குறித்து தீவிரவாத விசாரணை பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு அமைய, குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் குண்டசாலை பிரதேசசபைக்காக போட்டியிட்டு தெரிவான உறுப்பினரான, சமந்த பெரேரா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

1 comment:

  1. Mahinda Mahinda enru sollitta ellam sariya? Arasangam seyrazu mahimdaya Ranila? Avangada iyalaamaya maraikka Mahinda..hmm... Nadaka wendiyazellam nadandu mudinjuzu..

    ReplyDelete

Powered by Blogger.