Header Ads



ரத்ன தேரர் தலைமையில் முக்கிய சந்திப்பு - ரணிலின் எதிராளிகள் பங்கேற்பு

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் முக்கியமான சந்திப்பொன்று நேற்று இரவு நடந்துள்ளது. இந்த சந்திப்பிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவும் கலந்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டு எதிர்வரும் 4ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தவும் ஏற்பாடாகியுள்ளது. 

இந்நிலையிலேயே,  பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர், விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு இடையில் முக்கியமான சந்திப்பு நேற்று நடந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில் பிரேரணை தொடர்பில் தீர்மானமிக்க முடிவுகள் எடுத்திருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-எம்.எம்.மின்ஹாஜ்-

1 comment:

  1. நல்லாட்சியின் ஆரம்ப மூல கர்த்தா இவர்தானே எப்படியும் ரணிலுக்கு ஆதரவாக இருப்பார் .

    ReplyDelete

Powered by Blogger.