மாகாண தேர்தலுக்கு முன், தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரனும் - பிரதமர்
தற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (22) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது கையாளப்பட்ட தேர்தல் முறை குறித்து மீளாய்வு செய்வதன் ஊடாக தேர்தல் முறையில் புதிய திருத்தங்களை உருவாக்கலாம். புதிய தேர்தல் திருத்தச் சட்டம் காரணமாக ஏராளமான உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் நிலையற்ற தன்மை காணப்படுகின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த தேர்தலுக்கு முன்னதாக இந்த தேர்தல் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான தீர்மானங்களை பாராளுமன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
You cannot maintain law & order in the country, how can you win the election. The chance given by people to UNP is over. Now you can go home.
ReplyDeleteகொண்டுவரப்படவுள்ள புதிய மாகாண சபை தேர்தல் முறைமாற்றம் முஸ்லிம்களுக்கு பாதகமானது என தொகுதி நிர்ணய ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலாநிதி ஹஸ்புள்ளாஹ் கூறுகிறார்.இதன்படி பார்க்கும் போது தேர்தல் முறைமையை மாற்றாமல் இருப்பதே சிறந்தது.ஆனால் ரணிலின் கூற்று அண்மையில் இடம்பெற்ற கலப்பு முறைமையினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் இருப்பதால் தேர்தல் திறமையைக் மாற்ற வேண்டும் என்கிறார். இது மாகாண சபை தேர்தல் முறை கலப்பு முறைமையில் உள்ளது போன்ற மாயையினை உருவாக்கி தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கருத்து நிலையை உருவாக்க விளைகிறது ஆனால் இதன் மூலம் விகிதாசார முறையை மாற்றுவதற்கான தந்திரமாகவே இதை அவதானிக்க முடிகிறது.அப்படி இல்லையாயின் மாகாண சபை கலப்பு தேர்தல் முறையில் இல்லாத போது ஏன் அதை காரணம்காட்டி தேர்தல் முறை மாற்றம் கொண்டுவர வேண்டும் என கூற வேண்டும்.
ReplyDelete