Header Ads



அமெரிக்காவில், பாகிஸ்தான் பிரதமருக்கே இந்தக் கதி என்றால்..?

பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் கான் அப்பாஸி, அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பெயர் பனாமா பேப்பரில் இடம்பெற்றுள்ளதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் 18-ஆவது பிரதமராக ஷாஹித் பதவியேற்றுக் கொண்டார்.

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தமது சகோதரியை சந்திப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அப்போது அங்கு விமான நிலையத்தில் இறங்கிய அப்பாஸியை, விமான நிலைய அதிகாரிகள் வழக்கமாக பயணிகளை சோதனையிடுவது போல் அவரையும் சோதனை செய்தனர்.

அப்போது அவரது கோட்டை கழற்றி, கையில் இருந்த சூட்கேஸை பிடுங்கி பார்த்து அமெரிக்க அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


இது பாகிஸ்தானில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பாகிஸ்தானுக்கு நேர்ந்த அவமானம் என்று அந்நாட்டு ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒருநாட்டின் பிரதமரை இப்படியா வரவேற்பது என்றும் கண்டனக் குரல்களும் எழுந்துள்ளது.

விசா தடை, சில நபர்கள் அமெரிக்கா வர தடை விதிப்பு உள்ளிட்டவற்றால் அமெரிக்க அரசு மீது பாகிஸ்தான் அதிருப்தியில் இருக்கிறது.

மேலும் அணுஆயுத வர்த்தம் தொடர்பாக 7 பாகிஸ்தான் நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இந்த சூழலில் தற்போது பாகிஸ்தான் பிரதமரை சோதனையிட்ட விவகாரமும் பாகிஸ்தான் மத்தியில் கோபத்தை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸியை சோதனையிட்ட அமெரிக்க விமானநிலைய அதிகாரிகளின் மீது அந்நாட்டு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

2 comments:

  1. சந்தேகத்துக்குரிய ஒரு நாட்டிலிருந்து வருவதனால், அதிகாரிகள் தங்கள் கடமையை செய்தார்கள். அவ்வளவே..சிறிய விடயம்.

    ReplyDelete
  2. Why Mr. Abbasi, his sister and others go to USA for Medical Treatment while there are other places in Pakistan ,India, Singapore , Turkey, China etc. They ( we) deserve this sort of treatment for their stupidity.

    ReplyDelete

Powered by Blogger.