தங்கச்சி தாக்கியதில், மூத்த சகோதரி பலி
மோதர பகுதியில் சிறிய தங்கை தாக்கியதில் மூத்த சகோதரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சகோதரிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த மூத்த சகோதரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
மோதர வீதி, கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறிய தங்கை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Intha sambawathukku ghanam pohamattaru...
ReplyDelete