கண்டி வன்முறை, முழு நாட்டுக்கு பாதிப்பு - இனவாதத்தை போஷிப்பதால நாட்டின் எதிர்காலத்திற்கும் தடை
அரசியல்வாதிகளின் தேவைக்காக இலங்கையில் இனவாதம் போஷிக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று 23- நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசியல்வாதிகள் இனவாதத்தை போஷித்து வருவதாகவும் இதன் காரணமாக முழு நாட்டின் எதிர்கால பயணத்திற்கும் தடையேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் நாட்டுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியமும் நல்லிணக்கமும் இருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment