Header Ads



முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் போது, இராணுவப் புரட்சி நடைபெறுமா..?

கண்டியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னர் அவசரகால நிலைபிறப்பிக்கப்பட்ட போது என்னைச் சந்தித்த சுமார் எட்டு நாடுகளின் தூதுவர்கள்இலங்கையில் இராணுவப் புரட்சி எதுவும் நடைபெறப் போகிறதா என்று வினவினர்.

வன்முறையை கட்டுப்படுத்த அவசரகால நிலையைப் பயன்படுத்தியது பெரும் அபத்தம். இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தின் போது கடும் விசனத்தை மேல் மாகாண அபிவிருத்திஅமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருக்கின்றார் என அறியமுடிகின்றது.

கடந்த வாரங்களில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அமைச்சரவையில்காரசாரமாக விவாதித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பேஸ்புக் மீதான தடை நீக்கம்இலங்கையில் முதலீட்டுத்துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது எனச் சாடியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தவறுகள் இருந்தாலும் அவர்கள் வெளிநாட்டுமுதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து முதலிடுவதை சூட்சுமமாக செய்தனர்.

சிலமுதலீடுகளுக்கு இலவசமாகக் காணியை வழங்கிய ராஜபக்ச அரசு, வரி விலக்கையும்வழங்கியது.

உதாரணமாக இந்தியாவின் டாட்டா குழுமத்துக்கு கொம்பனித்தெருவில் 8ஏக்கர் காணியை அவர்கள் வழங்கினர். ஒரு பேர்ச் காணி அங்கு இரண்டு கோடிரூபாவாகும். 25 பில்லியன் ரூபா பெறுமதியான காணி அது.

கூடுதல் வரி விதிப்பும்நிவாரணிகள் இன்மையும் எமது முதலீட்டுத்துறை பின்னடையக் காரணமாகும் என்றும்அமைச்சரவையில் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரசை முன்னேற்றப் பாதையினூடாகக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம்என்ற அமைச்சரவைப் பத்திரம் ஒன்றையும் அமைச்சர் சம்பிக்க கடந்த வாரஅமைச்சரவைக் கூட்டத்தின் போது முன்வைத்துள்ளார்.

2 comments:

  1. இவன் திசைதிருப்ப நடத்தும் நாடகம்

    ReplyDelete
  2. அழிவின் விளிம்பில் நீ இருக்கிறாய்
    முதலில் உன்னை ஏன் 8 நாடுகள் தூதுவர்கள் ஏன் சந்திக்கணும்
    நீ இன்னும் அந்தளவுக்கு பெரியாகவில்லை
    உன்னுடைய இனவாதக்கொள்கைக்கு அல்லாஹ்வின் அழிவு நிச்சயம் இருக்கு.
    இப்படிக்கு
    மர்சூக் மன்சூர்
    தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.