மட்டக்களப்பு விமான நிலையம், நாளை திறக்கப்படுகிறது (படங்கள்)
மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தை, 2016ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது.
அதன்பின்னர், சிவில் விமானப் போக்குவரத்துக்கான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக 1400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பட்டுள்ளது.
நாளை பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையத்துக்கு, உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிக்க பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளன.
Post a Comment