யாழ்.மாநகரசபை பிரதி மேயராக ஈசன் தேர்வு
-பாறுக் ஷிஹான்-
மாநகரசபை ஆட்சியமைப்பதற்கான 1வது அமர்வு இன்று(26) காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதன்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன இரகசிய வாக்கெடுப்பை கோரியிருந்தன.
இதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றிருந்த போது தமிழ்தேசிய கூட்டமைப்பு 18 வாக்குகளையும், தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன 13 வாக்குகளையும் பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் பிரேரிக்கப்பட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஈ.பி.டி.பி சார்பில் பிரேரிக்கப்பட்ட மு.றமீடியஸ் ஆகிய இருவரில் ஒருவரை நீக்குவதற்காக குலுக்கல் முறையில் ஒரு தேர்வு நடத்தப்பட்டது.
இதில் வி.மணிவண்ணன் நீக்கப்பட்டு மீண்டும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பவிருந்த நிலையில் ஈ.பி.டி.பி போட்டியில் இருந்து தாமாக நீக்குவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து மேயராக இமானுவேல் ஆனோல்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து யாழ்.மாநகரசபை பிரதி மேயர் தேர்வு ஏற்பாடு செய்யப்பட்ட போது ஏகமனதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேரந்த துரைராஜா ஈசன் தெரிவு செய்யப்பட்டார்.
இதனை அடுத்து அடுத்த அமர்விற்காக சபை மாநகர சபை மேயரினால் அறிவிக்கப்படும் என தெரிவித்து நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
Post a Comment