Header Ads



பதவி விலகினார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் - முற்றுகிறது நெருக்கடி, நம்ப முடியல்ல என்கிறார் பிரதமர்


தென் ஆஃபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த போட்டிகளில் எஞ்சியுள்ள நாட்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் பதவி விலகினர்.

ஆஸ்திரேலியா - தென் ஆஃபிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் எஞ்சியுள்ள நாட்களில் டிம் பைன் கேப்டனாக இருப்பார். எனினும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் போட்டியில் விளையாடுவார்கள்.

வேக பந்து வீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உடனடியாக பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அரசின் அமைப்பான ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் வலியுறுத்தி இருந்தது.

இந்த சம்பவத்தை முன்னே அறிந்து வைத்திருந்த யாராக இருந்தாலும், தலைமைக்குழு உறுப்பினர்கள் அல்லது பயிற்சி ஊழியர்களாக இருந்தாலும், ஸ்மித்துடன் சேர்ந்து அவர்களும் பதவி விலக வேண்டும் என்று விளையாட்டு ஆணையம் தெரிவித்திருந்தது.

இச்சம்பவம் அதிர்ச்சியாகவும், மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் தாம் பந்தை சேதப்படுத்தியது உண்மைதான் என பேன்கிராஃப்ட் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், 'பேன்கிராஃப்ட்டின் இத்திட்டம் குறித்து தமக்கு முன்பே தெரியும்' என கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

இது தொடர்பான தகவல்களை சேகரிக்க, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் இரண்டு மூத்த அதிகாரிகள் தென் ஆஃபிரிக்கா பயணிக்கின்றனர்.

ஸ்டீவ், கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து கருத்து தெரிவித்த சதர்லான்ட், "என்ன நடந்தது என்று தெளிவாக தெரிய வந்த பிறகுதான் எதுவும் கூற முடியும்" என்று தெரிவித்தார்.

பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

தென் ஆஃபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலிய அணி குறித்து வந்த செய்தி அதிர்ச்சி மற்றும் மிகுந்த வருந்தத்தை அளிக்கிறது என ஆஸ்திரேலியாவின் பிரதமர் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

"ஆஸ்திரேலிய அணி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எங்கள் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் முன் மாதிரியாக திகழ்பவர்கள். எப்படி எங்கள் அணி மோசடி செய்யமுடியும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே, "கேப் டவுன் போட்டியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. பந்தை சேதப்படுத்தியது உண்மைதான் என நிரூபிக்கப்பட்டால், கேப்டன் ஸ்மித்தும் பயிற்சியாளர் டேரன் லேமானும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்

இது ஒரு கெட்ட கணவாக இருக்க வேண்டும் என்று தாம் நினைப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் க்ளார்க் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா, சம்பவம் தொடர்பாக ஐ.சி.சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @cricketaakash

மேலும், இதுகுறித்து தலைமைக்குழு பேசியதாக கூறிய ஸ்மித், தாம் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று முன்னதாக தெரிவித்திருந்தார்.

1 comment:

  1. ICC should ban the Australian cricket team participating international matches for at least 5 years.

    ReplyDelete

Powered by Blogger.