Header Ads



ரணிலை வீழ்த்த இரகசிய பேச்சு, திட்டத்துடன் காத்திருக்கும் மகிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோல்வியடையச் செய்தால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை அமைக்க ஒதுங்கியிருந்து ஆதரவை வழங்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

இதில் கூட்டு எதிர்க் கட்சி வெற்றி பெற்றால் அரசாங்கம் கலைந்துவிடும் எனவும், 4 ஆம் திகதிக்குப் பிறகு புதிய அரசாங்கம் அமைக்க வேண்டி ஏற்படும் எனவும் அரசியல் மட்ட தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் கொழும்பு அரசியல் தரப்பில் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. பிரதமர் ரணிலை வீழ்த்துவதற்கான இரகசிய பேச்சுக்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்தவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2 comments:

  1. இந்த பயங்கர கள்வர்களிடமிருந்து இந்த நாட்டு மக்களையும் நாட்டையும் காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. Raman andal enna , Rawanan Andal enna?

    ReplyDelete

Powered by Blogger.