Header Ads



பிரபாகரனை ஒரு புத்திசாலி என, குறிப்பிடப்போவது இல்லை - கோட்டாபய

புலிகளுடனான பேச்சு வார்த்தைகளில் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை எனவும், அது நேரத்தை வீணடிக்கும் செயலென தான் கருதியதாகவும் தெரிவிக்கும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை ஒரு புத்திசாலி என தான் குறிப்பிடப்போவது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் "யுத்தம்  முடிவுக்கு வருவதற்கு முன்னர், புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுவார்த்தைகள் ஏதாவது இடம்பெற்றதா எனவும், புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா? எனவும் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த கோட்டபாய "கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அவ்வாறில்லை. வெளிநாட்டில் அவரை கொழும்புக்கு கொண்டுவந்த போது அச்சத்துடன் காணப்பட்டார். அவர் அது தான் தமது கடைசித் தருணம் என்று நினைத்திருந்தார்.

எனினும் தற்போது அவர், மகிழ்ச்சியாக இருக்கின்றார் ஏனென்றால், அவருடைய கடந்தகாலம் மற்றும் தவறுகளை புரிந்து கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம், அவரை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ நாம் அனுமதித்தோம்" எனக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. என் தங்கமொ தங்கம்

    ReplyDelete

Powered by Blogger.