Header Ads



மாளிகாவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார் - குடும்பத்தினர் கதறல்.(வீடியோ)


மாளிகாவத்தையில் நேற்று -27- இரவு சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இந்த நபர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர்  , காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

'நிப்பு' என்று அழைக்கப்படும் சாஹுல் ஹமீட் மொஹமட் நிப்ராஸ் என்ற 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாக காவற்துறை தெரிவித்தது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில் , சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

https://www.youtube.com/watch?v=G9Md0E0t7gU

No comments

Powered by Blogger.