முஸ்லிம்களுக்கு எதிரான நிலைமை, மோசமடையமுன் விழித்துக் கொள்ளுங்கள் - கஜேந்திரன்
”இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.” எள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
உண்மையான நல்லிணக்கத்துக்கு மட்டுமல்ல, மீண்டும் (மோசமான நிகழ்வுகள்) இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதால் பொறுப்புக் கூறல் என்பது விட்டுக் கொடுக்கப்படவே முடியாததாகும். பொறுப்புக் கூறல் விடயத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமோ, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அங்கத்துவ நாடுகளோ தங்களை கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய முடியாது.
குற்றவிலக்களிப்பைத் தொடர்ந்தபடி தங்களின் விருப்பப்படி எப்படியும் செயற்படலாம் என்ற தத்துவத்தால் தான் யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளாக இலங்கை அரசு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அதன் தொடராக, இலங்கை பௌத்த, சிங்கள இனத்துவ நாடாக மாற்றும் தனது திட் டத்தை காலத்தால் மோச மான பாதிப்புகளுக்கு மத்தியில் அது தீவிரப்படுத்தியிருக்கின்றது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை தொடக்கம் இலங்கைக்குள் இருக் கும் தமிழர் தேசம் ஒழுங்கு முறையாகச் சீர்குலைக் கப்பட்டு சிதறடிக்கப்பட்டு வருகின்றது.
உலகம் விழித்துக் கொள்ள முன்னர் தமி ழர்களுக்கு எதிரான இன வழிப்புக் கட்டமைப்பை அழிக்கலாம் என்ற இலக்கை அடையலாம் என நம்பிக்கையில் செயற்பட்ட இலங்கை இப்போது சிங்களப் பேரின வாதத்துக்குச் சவால்விடும் வகையில் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் பக்கம் திரும்பியுள்ளது.
இலங்கையில், தமிழர்க ளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுமாறு அங்கத்துவ நாடுகளை நாம்மன்றாடி வேண்டுகிறோம். இலங்கை விடயத்தில் மாற்று வழியைத் தேடும் ஆணையாளரின் அறி விப்பை வரவேற்கும் அதே சமயம், மியன்மார் விவகாரத்தை சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திடம் வழிப்படுத்த வேண்டும் என்ற ஆணையாளரின் பரிந்துரை இலங்கை நிலைமைக்கும் பொருத்த மானது என்று நாம் கோருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்
Post a Comment