புத்தர் சிலைகளுக்குள், காம மாத்திரைகள் விற்பனை
வத்தளை கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா உணவகமொன்றின் வியாபார கூடாரமொன்றிலிருந்து சட்டவிரோத மருந்து வகைகள் மற்றும் போதை தரும் மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக, உணவு மற்றும் ஒளடதங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வைத்தியர்களின் எவ்வித முன் அனுமதிகளுமின்றி, மிக நீண்ட நாட்களாக விற்கப்பட்டு வந்த இவ்வில்லைகளில் பெரும்பாலானவை, ஆண்மையைத் தூண்டும் வில்லைகளாகக் காணப்பட்டதாக, உணவு மற்றும் ஒளடத அதிகார சபையின் பிரதான பரிசோதகர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் பதிவு செய்யப்படாத ஆண் சக்தியைத் தூண்டும் ஏழு வகையிலான ஒளடதங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையதான பல்வேறு வகையிலான போதை தரும் மாத்திரைகள் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வைத்தியர்களின் சிபார்சில் மாத்திரம் மன நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஒரு தொகை மருந்து வகைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை இதே வியாபார கூடத்தில் மற்றுமொரு நபர் புத்தர் சிலைகள், புத்தகங்கள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள் என்பனவற்றோடு மறைத்து வைக்கப்பட்டு மிகவும் சூட்சுமமான முறையில் விற்கப்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதான பரிசோதகர் அஜித் பெரேரா தலைமையில் பரிசோதகர்களான ஏ.ஜே.எம். நியாஸ், சட்டத்தரணி பண்டார விக்கிரம சேகர ஆகியோர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மருந்துவகைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, வத்தளை நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
Post a Comment