Header Ads



பாராளுமன்றத்தில் குழப்பம், அதிர்ச்சியில் Mp கள்- சபாநாயகருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


நாடாளுமன்ற அமர்வி்ன் போது ஏற்பட்ட அமளிதுமளியினால் 10 நிமிடங்கள் சபையின் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டது.

திருத்தங்களுடனான செயலூக்கமிக்க கடன் முகாமைத்துவ சட்டமூலத்தின் இராண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதற்கமைய மேலதிக 18 வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

எப்படியிருப்பினும் வாக்கெடுப்பின் பின்னர் அதன் முடிவுகள் நாடாளுமன்றத்தில் உள்ள திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.

அதில் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகைத்தராத அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் வாக்கும் பதிவாகியுள்ளமையினால் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது தொடர்பில் சபாநாயகரிடம் அறிவித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சர் மங்கள சமரவீரவின் வாக்குகள் பதிவாகவில்லை என அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்துள்ளார்.

அதற்கமைய சபாநாயகர் வாக்குகளை இரத்து செய்து விட்டு வாக்கெடுப்பு கட்டமைப்பை ஆராய்ந்து பார்க்குமாறும் மீண்டும் வாக்குகெடுப்பினை நடத்துமாறும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

எனினும் சபாநாயகரின் உத்தரவுக்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்தமையினால் நாடாளுமன்றத்தில் குழப்ப நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.