கண்டியில் ஏற்படவிருந்த, இனவாத மோதல் தடுக்கப்பட்டது - பொலிஸார்
கண்டியில் ஏற்படவிருந்த பாரிய இனவாத மோதலை சிசிடீவி கமராவினால் தடுப்பதற்கு முடிந்ததாக ஹத்துரலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கண்டியில் ஏற்பட்ட இன மோதல் சம்பவங்களை அடுத்து பொலிஸ் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அன்றையதினம் இரவு ஹத்துரலியத்த நகர வர்த்தகரின் கடைக்கு முன்னால் மிருக கழிவுகள் அடங்கிய பொதி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அடுத்த நாள் காலை கடையை திறப்பதற்காக வந்த கடையின் உரிமையாளர் பொதியை அவதானித்தவுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
பதற்றமான சூழலில் உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி அந்த இடத்தை சோதனையிடுவதற்காக குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இந்த செயற்பாட்டினை செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமரா சோதனையிடப்பட்டுள்ளது.
அந்த கமரா காட்சியில் நாய் ஒன்று மிருக கழிவுகள் அடங்கிய பொதியை வாயினால் கவ்வி கொண்டு வந்து கடைக்கு முன்னால் விட்டுச் சென்றுள்ளது.
சிசிடீவி கமரா இல்லாமல் போயிருந்தால் இது இனவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயலாக மாறி மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனவாதத்தை தூண்டிவிடும் அளவிற்கு நாய்களும் திறமையாக உள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எல்லா நாயும் ஓன்று மாதிரி இல்லை.சில வேலை நாயை விடவும் கேவலமான மனிதனும் உண்டு.அதில் விசேசமாக ன்றி கேட்ட நாய்கள் தான்.
ReplyDeleteathanalathan diganela musleemkal koduttha sotrai sappittutuu palliya neruppu wechcha natri ketta naikal
ReplyDelete