Header Ads



ரணிலுக்கு எதிராக, வாக்களித்தால் "தூக்கப்படுவீர்கள்"

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் எவ­ரா­வது வாக்­க­ளித்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­துடன்  கட்­சியில் இருந்து நீக்­கப்­ப­டுவர் என ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­தது.

அத்­துடன் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு தினத்­தன்று  ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தர­வேண்டும். அதற்­கான ஆலோ­ச­னைகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்றும் என்றும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூட்டம் நேற்று சிறி­கொத்­தாவில் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தின் பின்னர் கட்­சியின் எம்.பி. க்கள் பலர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­தனர். இதன்­போது கட்­சியின் பிரதி பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம்  ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே    அவர்  மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் எவ­ரா­வது வாக்­க­ளித்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுத்து கட்­சியில் இருந்து நீக்­குவோம். 

அத்­துடன் எவரும் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்க மாட்­டார்கள். ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் பிர­த­ம­ருக்கு ஆத­ர­வா­கவே வாக்­க­ளிப்பர்.  ஆகவே பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை நாம் தோற்­க­டிப்போம். இந்த வாக்­கெ­டுப்பின் போது நாட்டு மக்கள் எதிர்­பார்க்­கா­த­வர்கள் பலர் பிர­த­ம­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­பார்கள். 

அத்­துடன் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நாளன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தர­வேண்டும். அதற்­கான ஆலோ­ச­னை­களை நாம் வழங்­கி­யுள்ளோம்  என்றார்.  

இதன்­போது ரவி கரு­ணா­நா­யக்க எம்.பி ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில் 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். அதனை நாம் செய்ய வேண்டும். ஆகவே எதிர்­வரும் நான்காம் திக­தி­யன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிப்­ப­தனை நாட்டு மக்கள் கண்­டுக்­கொ­ளவர். அதன்­பின்னர் எமது பலம் அதி­க­ரிக்கும்.

அத்­துடன் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி நடந்­துள்­ள­தாக கூறு­கின்­றனர். அவ்­வா­றாயின் என்ன மோசடி நடந்­துள்­ளது என்­ப­தனை நிரூ­பித்து காட்­டுங்கள். மோசடி நடந்­துள்­ள­தாக கூறு­கின்­ற­வர்கள் அதனை ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிப்­பது கிடை­யாது. ஆகவே முன்­னைய ஆட்­சியின் போது நடந்த மோச­டிகள் குறித்து எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுப்­ப­தாக இல்லை என்றார்.

3 comments:

  1. தான் செய்ததைச் சரியென வாதிடுவதும் அதில் உறுதியாக இருப்பதும் அடுத்த கட்சியினரைச் சாடுவதும் அல்லாஹ்வின் எதிரியான சைத்தானின் பண்பு என்பதை நாம் தௌிவாகப்புரிந்து கொள்ள வேண்டும். சைத்தானின் சரியான நிலையை இன்று புரியாமல்தான் நாம் மார்க்கவிடயத்திலும் கண்மூடித்தனமாக சைத்தானைப் பின்பற்றுகின்றோம்.

    ReplyDelete
  2. கடந்த கால கள்வர்களை பிடித்து உள்ளே போட்டு இருந்தாள் இன்று இந்த நிலை வந்து இருக்காது இந்த அரசாங்கத்துக்கு.

    ReplyDelete
  3. கடந்த கால கள்வர்களை பிடித்து உள்ளே போட்டு இருந்தாள் இன்று இந்த நிலை வந்து இருக்காது இந்த அரசாங்கத்துக்கு.

    ReplyDelete

Powered by Blogger.