வீட்டுக்குள் புகுந்த கரடியுடன் போராடியதில், ஒருவர் படுகாயம் - ஏனையோர் தப்பியோட்டம்
கரடி தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயமடைந்த நிலையில், இன்று அதிகாலை கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் -வெந்தாசபுரம், யூனிட் பகுதியை சேர்ந்த 40 வயதான என்.ஏ. சஜித் நிஷாந்த என்பவரே சம்பவத்தில் படுகாயமைடைந்துள்ளார்.
பிரதேசத்திற்குள் கடந்த இரண்டு, மூன்று நாட்கள் சுற்றித்திரியும் கரடியை காட்டுக்குள் விரட்ட கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் கரடி திடீரென காயமடைந்தவரின் வீட்டிற்குள் புகுந்துள்ளது. வீட்டில் இருந்த ஏனையோர் வெளியில் ஓடி தப்பியுள்ளனர். எனினும் காயமடைந்தவர் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.
அவர் உயிர் தப்பிக்க கரடியுடன் போராடியுள்ளார். பின்னர், அயல்வாசிகள் பொல்லுகளால் தாக்கி கரடியை விரட்டியுள்ளார். இதனையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
karady iruka namma natilae ? OMG
ReplyDelete