Header Ads



சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா

சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மற்றும் குழுவினர், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

இதன் போதே, 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று அலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்தார் என அறியப்படுகிறது.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை அமைத்தல் உள்ளிட்ட, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1, 34/1 தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, 2017ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் அளிக்கப்பட்டது.

ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும், நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் செயற்பாடுகள் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கடந்தவாரம் கூறியிருந்தார்.

அதேவேளை, 2019 மார்ச் மாதத்துடன், சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடையவுள்ளது.

இந்தநிலையிலேயே, 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர், , சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. iwarkal ethir paarththa alawukku srilanka wil ina alippu nadakka willai athanaal meendum thanathu manitha urimai entra wansakaththukkul kondu wara muyatchi saikirarkal

    ReplyDelete

Powered by Blogger.