Header Ads



ரணிலுக்கு எதிராக, வசந்த சேனாநாயக்க..?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாத வகையில் நாடு திரும்பியவுடன் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மனச்சாட்சிக்கு உடன்பட்டு பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்கத் தேவைப்படின் அவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு பின்நிற்கப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் விஜயத்தில் இணைந்துள்ள இராஜாங்க அமைச்சர் பாகிஸ்தானில் வைத்து இது தொடர்பில் வினவியபோதே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஐ.தே.க.யின் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், நல்லவழி முறையிலோ அல்லது மாற்று வழிமுறையிலோ ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக வசந்த சேனாநாயக்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Dc

No comments

Powered by Blogger.