Header Ads



"பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதா? இல்லையா? என ரணிலே தீர்மானிக்க வேண்டும்'' - சம்பிக்க

"பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்பட முன்னர், அவர் பதவி விலகவேண்டுமா? இல்லையா? என்பதற்கப்பால் இப்போது உடனடி புத்துணர்ச்சி நடவடிக்கையொன்று தேவை.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைத்துவிட்டனர். அதை மறந்துவிடக்கூடாது.

இந்த யதார்த்தத்தை மறந்து செயற்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் டைனோசராகிவிடும். அதை எவராலும் தடுக்கமுடியாது.''

இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்துள்ளார் மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

"பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதா? இல்லையா? என்பதை ரணிலே தீர்மானிக்க வேண்டும்'' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டுமென அமைச்சர்கள் மட்ட சந்திப்பொன்றில் நீங்கள் கூறியுள்ளீர்களாமே? அது உண்மை தானா? என்று குறித்த கொழும்பு ஊடகம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க மேலும் கூறியுள்ளதாவது,

"பிரதமர் பதவி விலகவேண்டும் என்று நான் கூறவில்லை. பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதா? இல்லையா? என்பதை ரணிலே தீர்மானிக்கவேண்டும். அதற்கு முன்னர் உடனடியாக சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.

அது எப்படியான மாற்றங்கள் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்கவேண்டும். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துவிட்டனர்.

அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்குள் உரிய நடவடிக்கை இல்லையேல் அதன் பின் பேரழிவோன்றே காத்திருக்கிறது. இப்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் சில மாற்றங்களை செய்யவே வேண்டும்.

இதற்காகவே நான் உடனடியாக செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன என்பது பற்றி அமைச்சரவைக்கு ஒரு யோசனையை முன்வைத்துள்ளேன். 45

பக்கங்கள் அடங்கிய அந்த யோசனையை ஆராய்ந்து அமுல்படுத்த விசேட தெரிவுக்குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.

இப்போது ஐக்கிய தேசியக் கட்சி செயற்படாவிட்டால் அது அரசியலில் டைனோசராகிவிடும். அதன் எச்சங்களை ஒரு காலத்தில் தேடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்'' - என்று குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. இராஜினாமா செய்வதா இல்லையா என்பதை விவாதிப்பது வேறுவிடயம். ஆனால் பழைய யானைகள் மத்தியில் புதிதாக உட்புகுந்து யானைத் தோல் போர்த்திய ஓநாய் ஒன்று வேறு ஏதோ பசியில் மோப்பம் பிடித்து அலைவது போலத் தெரிகின்றது.

    ReplyDelete
  2. What a marvellous plan! Of course, I agree with (justice all's )comments.

    ReplyDelete

Powered by Blogger.