Header Ads



இலங்கைக்கு பச்சைக்கொடி காட்டி, கையெழுத்தும் போட்டார் டிரம்ப்


இலங்கைக்கு விசேட பிரதிபலன்களை வழங்கும் சுங்க வரிச் சலுகை தொடர்பான (ஜீ.எஸ்.பி) வரியை மீண்டும் வழங்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவு செலவு சட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இலங்கைக்கு வழங்கி வந்த ஜீ.எஸ்.பி வரிச்சலுகையானது கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்த வருடம் நிதி தொடர்பான விவகாரங்களில் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை நீடிக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி அறிவித்தது.

எனினும் கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப், இலங்கை மற்றும் மாலைதீவுக்கு வரிச்சலுகையை மீண்டும் வழங்க அனுமதியளித்து வரவு செலவு திட்டம் தொடர்பான சட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கிடைக்கும். இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதி வரை இலங்கையில் இருந்து வரி செலுத்தியே பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அமெரிக்காவுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேல் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இலங்கையின் ஆடை உற்பத்திகளுக்கு பிரதான இறக்குமதி வர்த்தக சந்தையாக அமெரிக்கா இருந்து வருகிறது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின் படி இலங்கையில் இருந்து கடந்த வருடம் வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிகளில் 25.6 வீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. Seems He is happy of what happened in Srilanka these days.

    ReplyDelete

Powered by Blogger.