அராஜக நிலையில் நாடு, முஸ்லிம்களுக்கு எதிரான, வன்முறையை தடுப்பதில் தோல்வி
கண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, சிறிலங்கா இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று வன்முறைகள் வெடித்தன.
சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் தோல்வியடைந்தனர்.
இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டது.
காவல்துறையினால் உதவி கோரப்பட்டதை அடுத்து உடனடியாக சிறிலங்கா இராணுவத்தினரை அங்கு அனுப்பி வைத்ததாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
Post a Comment