புதைகுழிக்குள் உருவான ஹாபிள்கள், ரஷ்யாவில் இஸ்லாம் பாதுகாக்கப்பட்ட மெய்சிலிர்க்கும் நிகழ்வு
ரஷ்யாவில் சோவியத் யூனியன் ஏற்பட்டபோது அடக்குமுறை பயங்கரமாக இருந்தது. யாரும் மதத்தைப் பின்பற்றக்கூடாது. பிரச்சாரமும் செய்யக்கூடாது. குர்ஆன் வைத்துக் கொள்ளக் கூடாது. அந்த நேரத்தில் ஒரு 21 பேர் கொண்ட ஜமாஅத் ஒன்று தாஷ்கண்டுக்குச் சென்றது. மக்களுக்கு குர்ஆன் கற்றுக்கொடுக்க அழைத்தது.
ஆனால், ஜமாஅத்தினரைக் காட்டிலும் அங்குள்ளவர்கள் மிக அற்புதமாக திருக்குர்ஆனை ஓதினார்கள். அதுவும் பார்க்காமல் ஓதினார்கள். ஒவ்வொருவரும் ஹாஃபிளாக இருந்தார்கள். இறைமறுப்பாளர்கள் ஆளும் பூமியில் அவர்கள் எப்படி ஹாஃபிளானானார்கள் என்று கேட்டால், அவர்கள் தரும் பதில் மிக மிக அதிர்ச்சியூட்டும்.
முதலில் வீட்டில் வைத்து அவர்கள் ஓதியபோது, ரஷ்யப்படை உள்ளே நுழைந்து ஒரு கர்பிணிப் பெண்ணை வயிற்றைக்கிழித்துக் குழந்தையை வெளியே எடுத்துவிட்டு, ஒரு உயிருள்ள பூனையை வைத்து அப்பெண்ணின் வயிற்றைத் தைத்துவிட்டுத் துடிக்கத்துடிக்க மரிக்கச் செய்தனர்.
ஒரே ஒரு அனுமதி மட்டும் இருந்தது. யாராவது இறந்துவிட்டால் அவரை அடக்கம் செய்வதற்கு கூட்டாக கூட்டமாகச் செல்லலாம். சந்தூக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு சென்றால், விட்டுவிடுவார்கள். இந்த ஒரு அனுமதியை மட்டும் வைத்துக் கொண்டுதான் நாங்கள் பத்துப் பதினைந்து குழிகளைத் தோண்டி வைத்துக்கொண்டு, எங்கள் ஹாஃபிள்களை அக்குழிக்கு ஒரு சந்தூக்குப் பெட்டியுடன் இரவுகளில் சென்று ஒவ்வொரு குழியிலும் நான்கைந்து (4 / 5) பேர் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு, விடிய விடியக் காலை 4 மணிவரை மணப்பாடமாக செவிவழிப்பாடம் ஓதி முழுக்குர்ஆனையும் ஒருசில ஆண்டுகளில் ஓதி ஓதி முடித்தனாராம். ஏகத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்க நினைத்த சோவியத் யூனியன் இன்று சுக்கு நூறாக உடைந்து நாணயமற்ற ஒரு குட்டி நாடாக தள்ளப்பட்டுள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வேதத்தை எவ்வாறெல்லாம் பாதுகாக்கின்றான் என்பதை எண்ணும்போது மெய்சிலிர்க்காமல் இருக்க முடியவில்லை.
''ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.''
source: முஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2011, பக். 52
Post a Comment