Header Ads



சம்மாந்துறை தவிசாளராக நௌஷாட், பிரதித் தவிசாளராக ஜெயச்சந்திரன் (படங்கள்)


சம்மாந்துறை பிரதேச சபையை முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இன்று காலை (27) சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.நௌசாட், பிரதித் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான  வாக்கெடுப்பில், ஆளுங்கட்சியான மக்கள் காங்கிரஸ் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுக்கு ஆதரவாக 12 வாக்குகள் பெறப்பட்டதுடன், கூட்டுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த 08 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவை அடுத்தே, சம்மாந்துறை பிதேச சபையில் இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எம்.வை.அமீர் -



No comments

Powered by Blogger.