கண்டி வன்முறை, விசாரணை நிறைவு - உண்மையை பகிரங்கப்படுத்த கோரிக்கை
கண்டி, தெல்தெனியவில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பிலான பொலிஸ் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாகவும் இதில் தொடர்புடையதாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய குழுவினரை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுக் கொள்வதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் பெயர், ஊர் என்பவற்றை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கண்டிக் கலவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தன் மீதும் தனது கட்சியின் மீதுமே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மலர் மொட்டு கட்சியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைப் பொறுப்புடன் தெரிவித்தார்.
DC
Kutram seytha manam kuru kurukkum azu thano izu...
ReplyDelete