Header Ads



அறிவிப்பு போட்டியில், இரண்டாம் இடம்


நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேர்பார்வையில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ஒலிபரப்பு பிரிவு ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட தமிழ் மொழி மூலமான அறிவிப்பு போட்டியில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் கலைப் பிரிவில் கல்வி பயிலும் அம்சார் முஹம்மட் இன்சாப் சிரேஷ்ட பிரிவில்; இரண்டாம் இடத்தை பெற்ற்றுள்ளார்.

சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் கலைப் பிரிவில் கல்வி பயிலும் அம்சார் முஹம்மட் இன்சாப் பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் காலத்திலிருந்தே அறிவிப்புத் துறைக்கு அறிமுகமாகியதுடன், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் நடைபெறுகின்ற நிகழ்வுகளின் போது அறிவிப்பில் ஈடுபட்டு வருகின்றார். கலை கலாசார மன்றம், இலக்கிய மன்றம், மாணவர் மன்றம் போன்றவற்றில் சிறப்பாக அறிப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் 44வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தி அறிவிப்பு பிரிவு ஊடகக் கலையின் முன்னேற்றத்திற்காக சர்வதேச பாடசாலைக்குகிடையிலான அறிப்பாளர் போட்டி சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கனிஷ்ட, மத்திய, சிரேஷ்ட பிரிவுகளில் நடைபெற்றது. சிரேஷ்ட பிரிவிற்கென தமிழ் மொழியில் நடாத்தப்பட்ட போட்டியில் அம்சார் முஹம்மட் இன்சாப் இரண்டாம் இடத்தை பெற்று பாடசாலைக்கும், சம்மாந்துறை வலயத்திற்கும் பெருமை சேர்த்தள்ளார்.

இம்மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலை அதிபர் ஏ.எல்.அப்துல் மஜீட் மற்றும் ஆசிரியர் குழாம் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

(எம்.எம்.ஜபீர்)

No comments

Powered by Blogger.