Header Ads



பாம்பு சின்னத்திலாவது மஹிந்த ராஜபக்ச, அதிகாரத்தை கைப்பற்றுவார் - கோத்தபாய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாம்பு சின்னத்திலாவது அதிகாரத்தை கைப்பற்றுவார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவினால் பிரதமர் பதவிக்கு வர முடியும் என்றால், பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஷிரானி பண்டாரநாயக்க மீண்டும் நீதியரசராக முடியும் என்றால் மஹிந்த ராஜக்சவினால் பிரதமராக முடியாதா என கோத்தபாய ராஜபக்ச வினவியுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் பிரபலத்தன்மை உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் அடக்குமுறை வேலைத்திட்டங்களை முறியடித்து பாம்பு சின்னத்திலாவது மீண்டும் மஹிந்த அதிகாரத்திற்கு வருவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைத்தந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு அரசியல் தளத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், கோத்தபாயவின் கருத்து குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2 comments:

  1. மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
    (அல்குர்ஆன் : 22:73)

    ReplyDelete
  2. 0 وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏ 
    8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

    ReplyDelete

Powered by Blogger.