தமிழ் தேசியக் கூட்டமைப்பு, திருடர்களைப் பாதுகாக்கக் கூடாது - கீர்த்தி தென்னகோன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு திருடர்களைப் பாதுகாக்கின்ற வேலையில் ஈடுபடாமல் எதிர்க் கட்சிக்குரிய கடமைகளை செய்ய வேண்டுமென இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டி உள்ளது.
அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
பிணைமுறி மோசடிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடந்துகொள்ளும் விதமானது அவர்கள் திருடர்களை பாதுகாக்க முயற்சிப்பதை உறுதிப்படுத்துகின்றது என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் நண்பர்கள் இருப்பதனை பிணைமுறி ஆணைக்குழுவிலும் பிணைமுறி மோசடிகள் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்தின் போதும் காணக்கூடியதாக இருந்தது.
யாருக்கு இதன் நன்மைகள் போய் சேர்ந்துள்ளது என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிணைமுறி ஆணைக்குழுவூக்கு சென்று கருத்து தெரிவித்த விதத்தில் நாம் கண்டோம்.
இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த நாட்டிற்கு பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் எதிர்க்கட்சி என்ற பாத்திரத்தை நாட்டிற்கு பொருந்தக்கூடிய விதத்தில் செயற்படக்கூடிய குழு என்பதனை செயற்பாட்டில் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
வடக்கு கிழக்கு பிரதேச நிருவாகத்திற்கு அப்பால் சென்ற தேசிய எதிர்க்கட்சியின் கடமைகளை இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றுகின்றதா என்ற கேள்வி இவர்கள் திருடர்களை பாதுகாக்க முன்வந்தமையானது எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ் மொழிபெயர்ப்பின் பிரதி இல்லாமல் பிணைமுறி விவாதத்தினை நடாத்த முடியாது போன்ற பல்வேறு உபாயங்களை கையாண்டு இந்த விவாதம் இடம்பெறுவதனை நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிப்பதானது, திருடர்களை தவிர வேறு எவருக்கும் சாதகமாக அமையாது.
பிணைமுறி மோசடிகள் என்றாலும் சரி மஹிந்த ராஜபக்ச காலத்தில் நடைபெற்ற மோசடிகள் என்றாலும் சரி பாராளுமன்ற விவாதமொன்றை நடாத்துகின்ற பாராளுமன்றச் சட்டப் பங்களிப்பை தோல்வியடையச் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது.
அதில் மிகவூம் துரதிஷ்டமான நிலைமையான வடக்கு கிழக்கு பிரதேச அரசியல் கட்சி என்ற வரையறைக்கு அப்பாற்சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பானது, தேசிய அபிலாஷைகளுடன் முன்னோக்கி நகரும் நிறுவனமொன்றாக எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வெளிக்கொணற வேண்டும்” என மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment