முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன், எங்களுக்கு தொடர்பில்லை - சம்பிக்க
கண்டியில் சில பிரதேசங்களில் அண்மையில் நடந்த வன்முறை சம்பவங்களுடன் ஜாதிக ஹெல உறுமய கட்சியை சேர்ந்த பிக்குமார் எவருக்கும் தொடர்பில்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அப்படி தொடர்பிருப்பதாக ஒப்புவிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜாதிக ஹெல உறுமய எதிர்காலத்தின் நாட்டின் தேசிய உரிமைக்காகவும் நாட்டின் சமூக அமைதிக்காகவும் தொடர்ந்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.
சிலர் இந்த சம்பவங்களுடன் பழைய சம்பவங்களை கோர்க்க முயற்சித்தனர். பேருவளை, மானெல்ல உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களுடன் கண்டி சம்பவத்தை தொடர்புபடுத்த முயற்சித்தனர்.
எனினும் அந்த சம்பவங்கள் எவற்றிலும் எமக்கு தொடர்பில்லை. எனினும் அந்த சம்பவங்களின் பின்னர் விகாரைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது நாங்கள் அங்கு சென்று அவற்றை மறுசீரமைக்க உதவியதுடன் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.
அதனை விடுத்து பேருவளை சம்பவங்கள் உள்ளிட்ட சம்பவங்களில் எங்கள் கட்சியினர் எவரும் சம்பந்தப்படவும் இல்லை. எதிர்காலத்திலும் அப்படியான சம்பவங்களில் சம்பந்தப்படவும் மாட்டார்கள்.
ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாங்கள் அகிம்சை வழியில் போராடினோமே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் ஆயுதங்களை கையில் எடுத்து வன்முறைகளில் ஈடுபடவில்லை.
அரசாங்கத்தின் செலவில் ஆயுத குழுக்களை வைத்துக்கொண்டு கொலைகளை செய்தவர்கள், அண்மைய கால சம்பவங்களை வேறு தரப்பினர் மீது சுமத்தி விட்டு, தமது இரத்த கறைப்படிந்த ஆடைகளுக்கு மேல் சில் துணிகளை அணிந்து தாம் குற்றமற்றவர்கள் என காண்பிக்க முயற்சிக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
කිසි දෙයකටවත් සම්බන්ධ නැති තොත්ත බබා; බලු සේනාවයි ඤාණසාරවයි මෙහෙයවන මහමොළකාරයා! ජාතිවාදි පැසිස්ට් වාදි නුඹේ කුමන්ත්රණකාරි ක්රියාවලට,ආගම නිග්රහය කර පව්වලට නුඹේ ජනපති සිහිනයට පෙරාතුවම සොබාදහම (අල්ලාහ් දෙවියන්)විසින්ම දඬුවම් ලැබීම නිසැකයි !!!
ReplyDeleteකිසි දෙයකටවත් සම්බන්ධ නැති තොත්ත බබා; බලු සේනාවයි ඤාණසාරවයි මෙහෙයවන මහමොළකාරයා! ජාතිවාදි පැසිස්ට් වාදි නුඹේ කුමන්ත්රණකාරි ක්රියාවලට,ආගම නිග්රහය කර පව්වලට නුඹේ ජනපති සිහිනයට පෙරාතුවම සොබාදහම (අල්ලාහ් දෙවියන්)විසින්ම දඬුවම් ලැබීම නිසැකයි !!!
ReplyDeleteJathi wadiye piyaa...
ReplyDelete