Header Ads



ராஜித்த வீட்டு விருந்தில் ரணில்மைத்திரி, சுஜாதா வழங்கிய கறுப்பு போப்பி, இன்முகத்துடன் வெளியேறினர்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இராப்போசன விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களதும் வெற்றியாக இந்த தீர்மானம் கருதப்படுகின்றது.

இந்த வெற்றியை கொண்டாடும் நோக்கில் சுகாதார அமைச்சரினால் இராசாப் போசன விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டுள்ளது.

ராஜிதவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் நான்கு மணித்தியாலங்கள் வரையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முழுமையாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு மிகவும் பிடித்தமான கறுப்பு கோபியொன்றை ராஜிதவின் மனைவி சுஜாதா சேனாரட்ன வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் முரண்பாடுகளைக் களைந்து இன் முகத்துடன் ராஜிதவின் இல்லத்தை விட்டு வெளியேறிச் சென்றதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. சந்தேகமேயில்லை. அவர்களுக்கிடையில் அவர்கள் இன்முகம்தான். பொதுமக்களுக்குத்தான் அவர்கள் நாட்டின் கடன்,பொருளாதார தேக்கம் என படம் காட்டுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.