Header Ads



ஜெனீவா சென்று, முஸ்லிம்களுக்கு நான் துரோகமிழைக்கவில்லை - பைசர் முஸ்தபா


முஸ்லிம் சமூகத்துக்குத் துரோகமிழைப்பது தனது அரசியல் கொள்கையில்லை என தெரிவிக்கும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, கண்டியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்லத் தன்னால் முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை 37 ஆவது கூட்டத்தொடரின் காலக்கிரம மீளாய்வு தொடர்பிலான விவாதத்தில் பங்கேற்க இலங்கை சார்பிலா அமைச்சர்கள் குழுவில் எனக்கும் இடம் கிடைத்திருந்து.

“இந்த சந்தர்ப்பத்தில் நான் ஜெனீவா அமர்வில் பங்கேற்கச் சென்றபோது நான் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்கப்போவதாகவும், முஸ்லிம்களுக்குத் துரோகம் இழைக்க முற்படுவதாகவும் பலர் கூறினர், சமூக வளைதளங்களிலும் பிரசாரம் செய்யப்பட்டது.

“கண்டியில் இடம்பெற்றது முஸ்லிம்களின் பிரச்சினை என்ற கோணத்தில் மாத்திரம் பார்க்கப்படக் கூடாது. அது பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புகளின் அசமந்தப் போக்கினால் ஏற்பட்ட பிரச்சினை.

“அதனால் பாதுகாப்புத் தரப்புகள் இந்த விவகாரத்தில் தவறிழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கள் உள்ளது என்பதை நாங்கள் சர்வதேசத்துக்கும் அறிவித்துள்ளோம்.

“இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கத்தால் வழக்கப்பட்ட வாக்குறுதி, சர்வதேசம் வரை எடுத்துச் செல்லப்படுவதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது. குறிப்பாகக் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. அதனால் நான் கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

“தற்போதைய அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் சமூகத்துக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும் நான் இந்த அரசிலிருந்தும் வெளியேறத் தயாராகவே உள்ளேன். எவ்வாறாயினும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் தேசிய கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சிறிய கட்சிகள் வடக்கு, கிழக்குக்கு மாத்திரமே பொருத்தமானதாக அமையும். தேசிய கட்சிகளிலிருந்து சேவையாற்றினாலும் முஸ்லிம் மக்களுக்கு ஒருபோதும் துரோகமிழைக்கமாட்டேன்” என்றார்.

3 comments:

  1. எதோ சர்வதேசம் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக முன் கூட்டியே அரசாங்கம் போரிந்தியத்தை சர்வதேசத்துக்கு சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  2. யோவ் உம்மிடம் ஒரு துளியாவது சமூகப் பற்று இருந்தால் கண்டி திகன பிரதேசங்களில் கலவரத்திற்கு காரணமான அரசியல் வாதிகள் இனவாதிகளுக்கு உரிய தண்டனைளைப் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்யும் அதைவிடுத்து சர்வதேசத்தில் நீமர் செய்ய வேண்டிய எதுவும் இல்லை அதை உம்மைவிட சரியாக புலம் பெயர் சகோதரர்கள் பார்த்துக் கொள்வார்கள்

    ReplyDelete
  3. Appa enna seithinga

    thurogam entral enna


    ooo evanuku tamilum theriyathu

    ReplyDelete

Powered by Blogger.