அரசியல் வாதியான மாணவி
கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கு அமைய பாடசாலை மாணவி ஒருவர் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாத்தாண்டிய - குடாவெவ பிரதேசத்தை சேர்ந்த சுபா தென்னகோன் என்ற 18 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் விஞ்ஞாப் பிரிவில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையிலும் தோற்றவுள்ளார்.
சுபா தென்னகோன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாத்தாண்டிய பிரதேச சபைக்கு தெரிவாகியுள்ளார்.
இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றிருந்த அவர் தனது வாக்கை தனக்கே அளிக்கும் வாய்ப்பையும் பெற்றிந்தமை விசேட அம்சமாகும்.
Post a Comment