கண்டியில் பாதுகாப்பு குறைக்கப்படுகிறது
கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடமையில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட இராணுவ முகாம்களில் இருந்து வரவழைக்கப்பட்ட படையினர் மீண்டும் அவர்களின் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
11வது படைப் பிரிவை சேர்ந்த படையணியினர் மாத்திரம் கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த படையினர் பொலிஸாருடன் இணைந்து ரோந்து பணிகளிலும் வீதி தடைகளை ஏற்படுத்தி தேடுதல்களை நடத்தி வருவதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment