Header Ads



முதலாம் திகதி, நாடு திரும்புங்கள் - சீனா சென்ற ஐ.தே.க. எம்.பிக்களுக்கு பிரதமர் உத்தரவு

சீனா சென்ற ஐ.தே.கட்சியின் எம்.பிக்களை நாடு திரும்புமாறு உத்தரவிட்ட பிரதமர்சீனாவுக்கு ஆய்வு சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் முதலாம் திகதி நாடு திரும்புமாறு அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்கூட்டிய தயார்ப்படுத்தும் நடவடிக்கையாக பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஆறு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

சீனா சென்றுள்ள இவர்கள் எதிர்வரும் எப்ரல் 3 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளனர்.

No comments

Powered by Blogger.