Header Ads



ஐ.தே.க. கைப்பற்றிய நீர்கொழும்பு + காலி மாநகர சபைகளுக்கு மஹிந்த அணியின் மேயர்கள்

 
இம்முறை இடம்பெற்ற (பெப். 10) உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றிய காலி மற்றும் நீர்கொழும்பு மாநகர சபைகளுக்கு மஹிந்த ஆதரவு அணியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியிலிருந்து நகர முதல்வர்கள் தெரிவாகியுள்ளனர்.

அந்த வகையில் காலி மாநகர சபையின் மேயராக காலி கொடகம பிரிவில் வெற்றி பெற்ற பிரியந்த சஹபந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (23) நகரசபை முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அச்சபையின் பிரதி முதல்வராக ஐ.தே.க. உறுப்பினர் மொஹமட் ஹுஸைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

காலி மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபை தேர்தலில், ஐ.தே.க. 22,270 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களையும், ஸ்ரீ.ல.பொ.பெ. 20,096 வாக்குகளுடன் 13 ஆசனங்களையும் பெற்றிருந்தன. (ஐ.ம.சு.கூ.- 03, ஜே.வி.பி.- 03, ஐ.தே.சு.மு.- 01, சுயேச்சை2 - 01)

அதேபோன்று, ஐ.தே.க.வினால் கைப்பற்றப்பட்ட, நீர்கொழும்பு மாநகர சபைக்கும் ஸ்ரீ.ல.பொ.பெ. கட்சியைச் சேர்ந்த தயான்ச லன்சா மாநகரசபை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர், சுதந்திரக் கட்சி உறுப்பிரும், ஐ.ம.சு.கூ. கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் லான்ஷாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில், நீர்கொழும்பு மாநகர சபையை வெற்றியீட்டிய ஐ.தே.க., 32,045 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை கைப்பற்றியிருந்தத. ஸ்ரீ.ல.பொ.பெ. 26,129 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை கைப்பற்றியது. ((ஐ.ம.சு.கூ.- 06, ஜே.வி.பி.- 03, ஐ.தே.சு.மு.- 01, அ.இ.ம.கா. - 01, சுயே-01, சுயே2 - 01)

No comments

Powered by Blogger.