ரணிலுக்கு எதிராக கண்டியில் இருந்து, கொழும்புக்கு பாதையாத்திரை
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூடியதன் ஊடாக கட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது என ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் பிரதம செயலாளர் மைத்திரி குணரத்ன கொழும்பில் இன்று -29- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியில் இன்று பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், இன்னும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
இந்தநிலையில், நாளை மறுதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு வரையில் பாதையாத்திரை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment