அரசாங்கத்தில் இல்லாவிட்டால் பரவாயில்லை - விஜித் விஜயமுனி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இல்லாவிட்டால் பரவாயில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -31- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் நான் கையெழுத்திட்டிருந்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன். கையெழுத்திட்டவர்கள் தற்போது அமைச்சு பதவிகளில் இருந்து விலக வேண்டும்.
அரசு ஒன்றுக்கு சவால் ஏற்படும் போது அந்த அரசு வலுவடையும். அரசாங்கம் மக்கள் சார்பான வேலைத்திட்டங்களுக்கு தூண்டப்படும்.
இதில் உள்ள கெடுதி என்னவொன்றால், நாடு ஸ்திரத்தன்மையை இழக்கும் நாடு வலுவிழக்கும், நாட்டிற்குள் மோதல்கள் ஏற்படும். இந்த இரண்டாவது விடயமே எதிர்க்கட்சியின் நோக்கமாக உள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற போர்வையில் திருடர்களுக்கு அரசாங்கத்தையும் நாட்டையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் நாம் செயற்படக் கூடாது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய நோக்கத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும் வகையில் எதனையாது எவரும் செய்தால், அவர்கள் அரசாங்கத்திற்குள் இருக்கவிட்டால் பரவாயில்லை என நான் நம்புகிறேன். பைத்தியகார தனமாக செயற்படுவதற்காக எமக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.
முழு அமைச்சரவைக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் நான் கையெழுத்திட்டிருந்தால், நான் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்.
இலங்கை மத்திய வங்கியின் 11 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புடைய சிறிய திருடனை நாங்கள் பிடித்துள்ளோம். 4 ஆயிரம் மில்லியன் ரூபா மோசடி செய்த பெரிய திருடர்களையும் பிடிக்க வேண்டும். சுரக்காயில் கை வைத்தது போல் பூசணிக்காயிலும் கைவைப்போம் என விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment