"இது பௌத்த நாடுதான் என, வாய்நிரம்ப சொன்ன ஜனாதிபதிக்கு பாராட்டு"
-Dc-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டை பௌத்த நாடு என வாய் நிரம்ப சொன்னதையிட்டு தான் சந்தோஷம் அடைவதாகவும், சிலர் இதனைக் கூறுவதற்கே கூச்சப்படுவதாகவும் ஸ்ரீ லங்கா அமரபுர மகா சங்கசபையின் புதிய தலைமைப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட சூலகண்டி பிரிவின் மகாநாயக்கர் கன்துனே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.
மகாநாயக்க தேரருக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (27) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மகாசங்கத்தினர் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையின் போது, “நாம் இந்த பௌத்த நாட்டில் இருந்து கொண்டு பெருமைப்படுகின்றோம். ஏனெனில், அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த பௌத்த போதனையில் தீர்வு பொதிந்துள்ளது என்பதாகும் எனக் கூறியிருந்தார்.
இதனைத் தொட்டுக் காட்டியே அஸ்ஸஜி மகாநாயக்க தேரர் இவ்வாறு கூறினார்.
இந்த நாட்டிலுள்ள கார்தினலும் கூட இந்த நாட்டை பௌத்த நாடு என்று கூறுவதற்கு தயங்குவதில்லை. எமக்கென்று உள்ளதை நாம் பாதுகாக்க வேண்டும். எமக்கு இதனைவிட்டால் வேறு இல்லை. ஏனையவர்களுக்கு உள்ளன. இவ்வாறு கூறுவதை இனவாதம் என்று கூறுவது தவறு. இது எனது தனிப்பட்ட கருத்தாகும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.
Post a Comment