Header Ads



என்னை சந்தேகித்தவர்களுக்கு பதில் சொல்லப்பட்டு விட்டது - ஆனால் நெருக்கடியில் உள்ளேன்


கடந்த 26-02-2018 அன்று எனது ஹோட்டலில் ஆரம்பித்த கலவரம் அம்பாறை பள்ளிவாயல் வரை முடிந்த விடயம் முழு உலகும் அறிந்த விடயமாகும்.

கொத்துக்குள் கருத்தடை மாத்திரையை போட்டு கொடுத்தாக போலியான விடயம் திரிவு படுத்தப்பட்டு என்னையும் பலாத்காரமாக ஒப்புக்கொள்ள வைத்ததும் நீங்கள் அறிந்த விடயமாகும்.

அந்த வகையில் சம்பவம் நடந்த தினம் அன்று என்னை அம்பாறை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பெறும்பான்மை இனத்தை சேர்ந்தவர் போட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக  கருத்தடை மாத்திரை போட்ட குற்றச்சாட்டில் வழக்கு  ஒன்றை  பதிவு செய்தார்கள்.

நேற்று முன்தினம் 27ம் திகதி குறித்த வழக்கு தள்ளுபடியானது அரச இரசாயன அறிக்கை பிரகாரம் கர்ப்பத்தைடை மாத்திரை விடயம் பொய்யானது என  நிரூபிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் என்னை சந்தேகம் கொண்டு பார்த்தவர்கள் பெறும்பான்மை இனத்தில் சந்தேக கண்ணோடு பார்த்தவர்களுக்கு குறிந்த அறிக்கை பதில் சொல்லிவிட்டது.

இந்த வன்முறையால் நான் எனது அனைத்து பொருளாதரத்தையும் இழந்து செய்வதற்கு எதுவும் இல்லாமல் பெறும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளேன்.

 இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட கண்டி வர்த்தகர்களுக்கு கிடைக்கும் சாதாரண பொருளாதார உதவிகள் கூட எனக்கு கிடைக்கவில்லை என்று பார்க்கும் போது கவலையாக உள்ளது இந்த வன்முறையால் 21 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்து நிற்கின்றேன்.

எனக்கு இதுவரை ஒரு சதம் கூட  உதவிகளோ நஷ்ட ஈடுகளோ கிடைக்கவில்லை என்பது கவலை தருகிறது.

ஆகவே எனது நிலையை கருத்தில் கொண்டு இனவாத விடயத்தில் பொருளாதார ரீதியாக உதவும் அமைப்புக்கள் தனவந்தர்கள் அம்பாறையில் பாதிக்கப்பட்ட எங்களையும் கவனத்தில் கொள்ளுமாறு தயவுடன் வேண்டிக்கொள்கிறேன்!

முஹம்மட் பர்சித்

காசிம் ஹோட்டல் 

தொடர்புகளுக்கு 07683030933

7 comments:

  1. முதலில் நீங்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு வையுங்கள்

    ReplyDelete
  2. Is there legal provision to claim damages from the false accuser and or the police.

    ReplyDelete
  3. தனவந்தர்கள் கட்டாயம் இந்த சகோதரருக்கும் உதவி செய்யவும்.

    ReplyDelete
  4. தொலைபே‌சி இலக்கத்தில் ஓர் இலக்கம் கூடுதலாக உள்ளது.சரியானதை இடவும்

    ReplyDelete
  5. If your part of Eastern or Northern Province they will consider you as an Alience. Our other part of Sri Lankan muslims has a mindset that your from a untouchable community. This is a hidden truth.

    ReplyDelete
  6. ACJU and SLTJ over to you to take appropriate action to help this victim.

    ReplyDelete
  7. I mean alien. We have millions of discriminatory incidents against E & N people. I kindly requested you to interview Eastern and Northern people individually those who living in Colombo they will reveal the truth.

    ReplyDelete

Powered by Blogger.