ரணிலை தோற்கடிக்காமல் ஊருக்கு வரவேண்டாம், என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த ஆறு பேரை தவிர ஏனைய அனைவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என காணி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்களிக்காத ஆறு பேர், ஜனாதிபதி கூறினால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெற செய்யாமல் ஊருக்கு வர வேண்டாம் என மக்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் ஏக்கநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment