"கறுப்பு அபாயா அணிவதை, விட்டுக்கொடுக்க முடியாது"
யாருடைய அழுத்தங்களுக்கும் பயந்து முஸ்லிம்கள் தமது பெண்கள் கறுப்பு அபாயா அணிவதையோ நமது கலாசார விழுமியங்களை பாதுகாப்பதையோ விட்டுக்கொடுக்க முடியாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலுக்கு காரணம் அபாயாவோ வேறு உணவுகளோ அல்ல. மாறாக எப்படியாவது முஸ்லிம்களை தாக்க வேண்டும் அவர்கள் பொருளாதாரத்தை அழிப்பதன் மூலம் அடிமைப்படுத்த வேண்டும் என்ற உலகளாவிய திட்டத்தின் எதிரொலியே இந்த நிகழ்வுகளாகும்.
அன்று நாம் ஹலாலை விட்டுக்கொடுத்ததன் மூலம் எமது நல்லிணக்கத்தையும், பௌத்த மதத்தின் மீதான மரியாதையையும் காட்டினோம். ஆனால் அதனை அடிமைத்தன விட்டுக்கொடுப்பாக நினைத்துக்கொண்டனர். ஆனால் இந்த ஹலால் என்பது ஒரு வெள்ளோட்டமே என்பது இப்போது புரிகிறது.
முஸ்லிம் பெண்கள் கறுப்பு அபாயாவை களைந்து கலர் அபாயாவை அணிந்தாலும் அதற்கும் ஒரு குறை நிச்சயம் சொல்வார்கள். ஏன்தலையை மறைக்கிறீர்கள் என்பார்.
அதையும் களைந்து குட்டை கவுனை அணிந்தாலும் ஏன் எம்மைப்போல் நீங்கள் அணிகிறீர்கள் என கேட்டு அடிக்க வருவார்கள். ஆக இனவாதிகள் எதையும் சொல்லத்தான் செய்வர். இந்த நிலையில் நமது பாரம்பரியங்களை விட முடியாது.
ஆகவே கறுப்பு அபாயா அணிவோர் தைரியமாக அணிய வேண்டும். இதுவரை அணியாதவர்களும் இனி அதிகம் அணிய வேண்டும். அதுதான் எம்மை அடித்து நொறுக்கி விட்டீர்களே இனி ஏன் நாம் கறுப்பு அணிவதை விட வேண்டும் என கேட்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எவ்வளவு அடித்தாலும் அவர்கள் தமது கொள்கையில் உறுதியானவர்கள் என்பதை பேரினவாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் நாம் உறுதியாக இருந்தால்த்தான் எம்மை சீண்டுவதை தவிர்ப்பார்கள்.
ஆகவே மார்க்கம் நமக்கு பகிரங்கமாக அனுமதித்திருக்கும் எதனையும் நாம் இனவாதிகளுக்காக விடத்தேவையில்லை. இது விடயத்தில் முஸ்லிம் புத்திஜீவிகள் என்போர் முஸ்லிம் சமூகத்துக்கு புத்திமதி சொல்ல வராமல் பேரினவாதிகள் இது விடயங்களை பெரிது படுத்தியதன் காரணமாகவே முஸ்லிம்கள் மேலும் மேலும் மார்க்கத்திலும் தமது கலாசாரத்திலும் பற்றுள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
என்ன மௌலாவி இப்போது உள்ள பிரச்னை, எங்கே ஓடுவது என்று. அடுத்த மியன்மாரை விட மோசமாக இந்நாட்டில் இருந்து முஸ்லிம்களை விரட்ட சதித்திட்டம் இஸ்ரவேலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் இருப்புகுகு வழியைப் பாருங்கள்.அதற்கு ஆலோசனை செய்ய முன்வாருங்கள். ஓடுவதற்கு காடு கூட இல்லாத நிலையில் நாம் தவிர்க்கின்றோம்.
ReplyDeleteHe is correct and we need to be moderate in our approach.
ReplyDeleteகருத அணிவது கட்டாயமில்லை என்று சகுடியே அறிவித்ததன் பின்புமா முஸ்லிம்கள் இத்தொநோன்டு வாழும் நாட்டில் கருப்பு அணியவேண்டுமாம் இவரு பத்வா கொடுக்காரு. இவர்களெளை என்னவென்று சொல்வது.
ReplyDeleteExtremism will not bring anything good decision.
ReplyDeleteIf you are ready to change your cloth, beard, identity due to the fear of death.. It is OK. BUT it seems most of our Muslims are ready to do this not because of Racist expectation only. BUT Most of these people are either belong to certain group who do trim or not keep beard or wearing trousers below ankle and love to wear court kit, try to justify their methodology is correct.
ReplyDeleteDear Brothers and Sister, Remember out of fear of death you may change your beard and cloth.. But if you do the same out of silly expections of groups and racist this is too much.
I am afraid that, those who wanted to change their identity at this level of fear..May change their place of prayer and way of prayer too... As Kuffar will pull you till this situation.
Imagine the day of DAJJAL Arrival... ? WEAK Muslim will like today will give up everything from Islam.
May Allah Make us live wisely, courageously and die in Islam.
பாரம்பரியம் என்பது இஸ்லாமிய கொள்கையை வேறுபடுத்திக்காட்டும் ஆனால்,இஸ்லாம எதை சொல்லியுள்ளதோ அதை செய்ய வேண்டுமே தவிர இடையில் புகுத்தியதை எல்லாம் பாரம் பரியம் ,இஸ்லாம் என்றல்லாம் சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வது மென்மேலும் அடிவாங்க வைக்கும் பின்புத்திதான் இது.இஸ்லாம் எங்கையாவது கருப்பு உடைதான் ஹிஜாப் என்று சொல்லியுள்ளதா?குழப்புவதும் குலம்பிப்போயுல்லதும் இந்த சில உ கள்தான்
ReplyDeleteமுதல்ல இந்தாலுடைய மூலையை கருப்பு துணி போட்டு புதைக்க வேண்டும்
ReplyDelete